Skip to main content

நீதிமன்றத்தில் ஆஜராகாத ராஜேஷ் தாஸ் - பாலியல் புகார் வழக்கு ஒத்திவைப்பு!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

ரச


தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிக்கு சென்றபோது பாதுகாப்பு பணிக்காக முதல்வருடன் இவர் சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இன்று (02.11.2021) வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இருவரும் மீண்டும் ஆஜராகாத காரணத்தால் வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்