Skip to main content

காணும் பொங்கலில் களைகட்டிய பிச்சாவரம் படகு போட்டி... அசத்திய சுற்றுலா பயணிகள்...

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள உப்பனாற்றின் அருகில் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடுகள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த காடுகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் உள்ளன. மருத்துவ குணம் நிறைந்த சுரபுன்னை காடுகளை பார்த்து ரசிப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

 

pongal celebrations in pichavaram

 

 

இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிகளுக்கு அறையாண்டு விடுமுறை விடப்பட்டது. அதனையொட்டி உள்ளாட்சி தேர்தல் விடுமுறை, தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த 5 நாட்களாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது.  இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையிலும், பயணிகளை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக மேலாளர் அமுதவள்ளி பிச்சாவரத்தில் பொங்கல் தினத்தில் படகு சவாரி செய்ய வரும் வெளியூர் பயணிகளுக்கு இடையே துடுப்பு படகு போட்டி நடத்த உத்தரவிட்டார். அதன்படி துடுப்பு படகு போட்டி நடத்தப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பிச்சாவரம் கிளை மேலாளர் தினேஷ்குமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒவ்வொரு படகிலும் 2 பேர் அமர்ந்து துடுப்பு போட்டனர். இதில் சென்னை கிண்டியை சேர்ந்த ஹரீஷ், ஞானம் ஆகியோர் முதல் இடத்தையும், திருவாரூரை சேர்ந்த அஜித்குமார், பாலாஜி ஆகியோர் 2-வது இடத்தையும், கோவையை சேர்ந்த ஷாஜகான், இம்ரான்கான் ஆகியோர் 3-வது இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முதல் இடத்திற்கு ரூ 3 ஆயிரம், 2-வது ரூ 2 ஆயிரம், 3-ம் இடத்திற்கு ரூ ஆயிரம் என  பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.  இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும் வரவேற்றனர். 

இதேபோல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிதம்பரம் சுற்றுபகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கும்மிஅடித்து, சிலம்பம்,கபடி, கோகோ,சில்லி விளையாட்டு, கண்ணாம்மூச்சி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Inspection by the Commissioner of Tourism at Pichavaram

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலாதளத்தை பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலாத்துறை ஆணையருமான காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வகுமார், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளைரவீந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனுசாமி, பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

பிச்சாவரம் சுற்றுலாத்தலம் மேம்படுத்தும் பணி; சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Commissioner of Tourism inspects the development of Pichavaram tourist site

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா தலத்தை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.  இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலா துறை ஆணையருமான திருமதி காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

 

இதனை தொடர்ந்து சிதம்பரத்தில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வக்குமார் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன்,  சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனிசாமி,  பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.