கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கல்லூரி மாணவ மாணவிகள்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள பொறையார் TBML கல்லூரியில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மாணவர்சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் பேசுகையில்," கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 273 க்கு மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கயவர்கள் அனைவரையும் பாரபட்சமில்லாமல் கைது செய்திட வேண்டும், அவர்கள் மீது கடும் சட்டத்தை பதிவு செய்யப்பட வேண்டும், அந்த வழக்கினை சிபிஐ விசாரணையில் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையில் சட்ட விதி 161ன் படி பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்கப்பட வேண்டும், மேலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும், பாலியல் வன்கொடுமையையும் புகைப்படத்தையும், வீடியோவையும் அழித்திட வேண்டும்." என முழக்கமிட்டபடி பேசினார்.
அதற்குமுன் கல்லூரியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மாணவிகளில் அதிகம் கலந்து கொண்டது மாணவிகளே. அவர்களின் கையில் ஏந்தி வந்த பதாகைகளில் "அடிக்காதே அண்ணா வலிக்குது நானே கழட்டுறேன் என்று பெண்ணின் கதறல் காமவெறி நாய்களுக்கு கேட்கவில்லையா, கேட்கவில்லையா, காமவெறியர்களே உங்களது கொட்டம் அடங்க காலம் வெகுதொலைவில் இல்லை, காம வெறியர்களே பணக்கார நாய்களை உடனே கைது செய், கைது செய், என்பன உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக வந்து கல்லூரியில் வாயிலில் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டம் அப்பகுதியில் பெரிய விழிப்புணர்வு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.