Skip to main content

பாஜக எங்களுக்கு போட்டியே இல்லை.. ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகதிகள் இருந்தும் கூட நாடாளுமன்ற தொகுதி இல்லை என்ற விரக்த்தியில் உள்ளனர் வாக்களர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள். இந்த நிலையில் தி.முக கூட்டணியில் புதுக்கோட்டை சார்ந்துள்ள ஒரு தொகுதியில் கூட தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்பதால் உடன்பிறப்புகள் சோர்வடைந்துள்ளனர். 

 

election

அதே போல அ.தி.மு.க கூட்டணியில் கரூர் தொகுதி மட்டும் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை நிறுத்தப்பட்டுள்ளார் மற்ற  3 தொகுதியிலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டனர்.  இந்த இரு கட்சிகளும் புதுக்கோட்டை மாவட்டத்தைவிட்டு ஒதுங்கி செல்ல தொகுதியை பறிகொடுத்த மக்கள் நோட்டாவின் பக்கம் அதிகம் வாக்களிப்பார்கள் என்பதால் தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். 

 

election

 

இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்தார். முதலில் புதுக்கோட்டையில் சந்தித்த பிறகு அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் தொகுதியில் வருவதால் அறந்தாங்கியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ஆதரவை கேட்டார். அப்போது நான் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்திக்க நேரமில்லை அதனால் அனைவரையும் மொத்தமாக சந்திக்கிறேன் களப்பணி செய்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். 

 

முன்னதாக புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது. பா.ஜ.க எங்களுக்கு போட்டி இல்லை. ராமேஸ்வரம் உள்ளிட்ட இந்து திருத்தலங்களை சுற்றுலாத்தளமாக மாற்ற முயற்சி செய்வேன் என்றார். தொடர்ந்து அறந்தாங்கியில் பத்திரிக்கையாளர்களிடம் எனக்கு விமானத்திற்கு தாமதம் ஆகிடுச்சு என்று பேட்டியை தவிர்த்துவிட்டு சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்