Skip to main content

கந்துவட்டியை கண்டுகொள்ளாத போலீசார்... சாவின் விளிம்பில் பெண்....!!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

 

 

"வட்டி மேல் வட்டியும், அசலையும் சேர்த்து செலுத்தியும், இன்னும் வேண்டும் எனக் கேட்டு கந்துவட்டிக்காரர்கள் தொந்தரவு செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை." என புகார் கொடுத்து, காவல்துறையினர் உதாசீனப்படுத்த நிலையில், அந்தப் பெண் விஷத்தைக் குடித்துத் தற்கொலை முயற்சி செய்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றது.

 

suicide

 

 

suicide

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலை சேர்ந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்யும் செந்தில்குமாரின் மனைவி மாரீஸ்வரி. இவர் வீடு கட்டுவதற்காக திருப்புவனம் பன்னீர்செல்வம், லாடனேந்தலை சேர்ந்த கீதா, பானுமதி மற்றும் மதுரை சதீஷ்குமார் ஆகியோரிடம் மொத்தமாக ரூ.1 லட்சத்தைப் பெற்று, வட்டிக்கு மேல் வட்டி என்ற நிலையில், அசலும் வட்டியுமாக சேர்ந்தி ரூ.6 லட்சத்தினை திரும்ப செலுத்தியிருக்கின்றார்.

 

 

suicide

 

இந்நிலையில், " அனைத்துப் பணமும் செலுத்திய நிலையில் இன்னும் ரூ.4 லட்சம் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். உயிரை விடுவதைத் தவிர வேறுவழியில்லை." என வீடியோவில் பேசி வாட்ஸ் அப்பில் வைரலாக்கி விஷத்தைக் குடித்து  மதுரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்துள்ளார் மாரீஸ்வரி. அதே வேளையில், "தற்கொலை முயற்சி செய்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் முன்னரே புகார் கொடுத்தும், காவல் நிலையத்தார் மெத்தனமாக இருந்ததாலே இந்த முடிவு எடுத்ததாகவும் தகவல்" வெளியானது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்