





Published on 06/09/2019 | Edited on 27/04/2020
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் தடைச்செய்யப்பட்டுள்ளன. இருந்தும், வடமாநிலங்களில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. தமிழக காவல்துறை தொடர்ந்து இத்தகைய குட்கா விற்பனையை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் நேற்று இரவு ஆர்.ஏ.புரம் காமராஜர் சாலையில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தவழியே வந்த இரண்டு வாகனங்களை சோதித்தபோது அதில் 1800 கிலோ எடைகொண்ட குட்கா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சென்னை,அபிராமிபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.