Published on 05/05/2023 | Edited on 05/05/2023

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள முகமது பந்தர் பகுதியைச் சேர்ந்த முகமது காசிம். இவர் அங்குள்ள ஜமாத் தலைவராக உள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் மாலை கூரியரில் பெரிய பார்சல் வந்துள்ளதாக கொண்டு வந்து கொடுத்துள்ளனர். அதில் அனுப்புநர் முகவரி தெளிவாக இல்லை. நேற்று மதியம் அவரது மகன் முகமது மஹாதீர் அந்தப் பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் மண்டை ஓடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து முகமது காசிம் திருவையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முதல்கட்டமாக அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போலீசாரிடம் வடமாநிலத்தவர் பேசியுள்ளார். இந்த பார்சலை எதற்காக யார் அனுப்பியது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.