Skip to main content

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்

 

 Appointment of new Chief Justice of Madras High Court

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா தற்பொழுது மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர தலைமை நீதிபதி அவசியம் என்று கொலிஜியம் அறிவுறுத்தி கடந்த மாதம் 19 தேதி இவரது பெயரை பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

 

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா ஓய்வு பெற்ற நிலையில் வைத்தியநாதன் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !