Skip to main content

3வது முறையாக வெடித்த டால் எரிமலை! 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020
p

 

பிலிப்பைன்ஸின் டால் ஏரிமலை வெடித்துச்சிதறியதால் சாம்பல் புகை வெளியேறி புகை மண்டலமாக மாறிவிட்டதால் அம்மலையை சுற்றியிருந்த 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

p

 

பிலிப்பைன்ஸ் நாட்டில்  24 எரிமலைகள் உள்ளன.  இதில், டால் எனும் எரிமலை தான் இரண்டாவது மிகப் பெரியது . தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ள இந்த எரிமலை மிகப்பெரிய ஏரிக்கு நடுவே உள்ளது.   இந்த எரிமலை ஏற்கனவே வெடித்து சிதறியதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர்.

 

p

 

இந்த நிலையில், இந்த டால் எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது.  1 கி.மீ உயரத்திற்கு மேல் சாம்பல் புகை வெளியேறி வருகிறது.   இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எரிமலை வெடித்ததையடுத்து எரிமலையை சுற்றி அமைந்துள்ள 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு தெரிவித்துள்ளது.  டால் எரிமலை வெடிப்பால் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிமலை வெடிப்பால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மணிலா விமான ஓடுதளம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 170 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டால் எரிமலை இதற்கு முன்னர் 1911-ம் ஆண்டு தால் வெடித்து சிதறியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அடுத்து,  1977-ம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தது. 43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தால் எரிமலை வெடித்திருக்கிறது.

சார்ந்த செய்திகள்