
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ராமநத்தம் ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்து ஆதியன் (பூம்பூம்மாட்டுக்காரர்) சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு திட்டக்குடி வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை இவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அம்மக்களுக்கு பட்டா வழங்க வேண்டி விருத்தாசலம் தனிவட்டாட்சியரிடம் (ஆதிதிராவிடர் நலம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் பொன்னுசாமி தலைமையில் இன்று மனு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாக குழு வி.பட்டுசாமி, ஒன்றிய செயலாளர் எம்.சின்னதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.சுப்பிரமணியன், வி.பி.முருகையன், எம்.நிதி உலகநாதன், மற்றும் கிளை உறுப்பினர்கள் மாயவன், ராஜ்குமார், குப்புசாமி, மாரியம்மாள், வள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.