
கோவை மாவட்டம், போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். அதே பகுதியில் மேகா என்பவரும் வசிக்கிறார். சதீஷ், தான் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாயைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை மேகா, அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காட்சியின் உதவியுடன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மேகாவின் வீட்டிற்கு வந்த சதீஷ், அவரையும் அவரது கணவரையும் மிரட்டியதுடன் மேகாவின் கன்னத்திலும் அரைந்தார். அதனைத் தொடர்ந்து மேகா, மீண்டும் போத்தனூர் காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போத்தனூர் காவலர்கள், சதீஷ் மீது மேலும் ஒரு வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.