Published on 27/05/2021 | Edited on 27/05/2021
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதால் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த வகையில் சென்னை அடையாறு மேம்பாலம் பகுதியில் காலைமுதல் போக்குவரத்து நடமாட்டம் அதிகமாக இருந்தது. அதனால் காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் மடக்கி இ-பதிவு சான்றுகளை சோதனை செய்தனர். பின்னர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த காவல்துறையினர், முக்கியத் தேவைகளுக்காக செல்வோரையும், இ-பதிவு வைத்திருந்தவர்களையும் மட்டுமே அனுமதித்தனர்.