Skip to main content

நியாய விலைக்கடைகளில் வரிசையில் காத்திருந்த மக்கள்..! (படங்கள்)

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மக்களை அதிகமாக பாதிப்படையச் செய்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் 24ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைத் தடையில்லாமல் பெற வேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு, நியாய விலை கடைகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் இன்றுமுதல் (25.05.2021) அனைத்து ரேஷன் கடைகளிலும்  உணவுப் பொருள் வழங்கப்படுகிறது.

 

இதனையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மக்கள் வரிசையில் காத்திருந்து உணவுப் பொருளை வாங்கிச் சென்றனர். மேலும், தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றதும் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக, கரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளாக கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரிசி அட்டைதார்களுக்கு 2,000 ரூபாய் கடந்த வாரமே கொடுக்கப்பட்டுவிட்டது. அதில் முதல் தவணை கரோனா உதவி பணம் 2,000 ரூபாய் வாங்கத் தவறியவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்