இந்தியா முழுவதும் கரோனாவின் பரவல் அதிகரித்துள்ளதால் அநேகமான மாநிலங்களில் முழு ஊரடங்கானது அமலில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கானது அமலில் இருந்தது. இந்நிலையில், விதிக்கப்பட்ட தளர்வுகளில் மேலும் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.
அதில், வேறு மாவட்டத்திற்குச் செல்ல இ-பாஸ் முறை, தேநீர் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க - விற்க ஒதுக்கப்பட்ட நேரமானது காலை 12 மணிவரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 மணிவரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றுமுதல் (15.05.2021) காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்கும் என அரசு அறிவித்ததையடுத்து, சென்னை அயனாவரம் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.