Published on 20/07/2020 | Edited on 20/07/2020
அதிகப்படியான மின்கட்டணம் வசூலிப்பை கண்டித்து தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பான ‘பத்து ரூபாய் இயக்கம்’ சார்பில் உடலில் மின் பொருள்களை மாட்டி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பாதிப்பால் வாழ்வதாரம் இழந்து தவிக்கும் மக்களிடமிருந்து மின்சாரக் கட்டணத்தை கந்து வட்டிபோல தமிழக அரசு வசூலிப்பதாக கண்டித்து ‘பத்து ரூபாய் இயக்கம்’ சார்பில் அண்ணா சாலையில் உள்ள தலைமை மின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘தமிழக அரசே! கரோனா காலத்தில் கந்துவட்டிக்காரன் போல கரண்ட் பில் கலெக்ஷன் செய்யாதே!’ என்ற வாசகம் கொண்ட பதாகையினைக் கையில் ஏந்தியவாறும் உடலில் பல்புகள் மற்றும் வயர்களை சுற்றிகொண்டும் கோஷமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.