முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் குறித்த இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கலைஞர், 13 வயதிலே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றியவர். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவரான கலைஞர் பன்முக தன்மை கொண்டவர். சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலம் ஏற்படுத்தியவர். ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரிய கலைஞர், தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை அளித்தவர். பராசக்தி படத்தின் மூலம் தன்னை பகுத்தறிவாளர் என்பதை உலகிற்கு உணர்த்தியவர். கலைஞரின் சாதனைகள் எப்போதும் மண்ணில் நிலைத்திருக்கும். கலைஞரின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவிக்கிறேன். என்றார். மேலும் கருணாநிதி என பெயரை கூறாமல் திரு. கலைஞர் என குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.