Published on 16/07/2021 | Edited on 16/07/2021

"தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு வெளியாகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். இந்த இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து, ஜூலை 22- ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.