Skip to main content

'ஹோம் டெலிவரி' செய்யப்படும் பழனி 'பஞ்சாமிர்தம்'! - மகிழ்ச்சியில் பக்தர்கள்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Palani Panchamirtham in the postal

 

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சென்றவருடம் முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் பூட்டப்பட்டது. தளர்வுகள் கொடுக்கப்பட்ட பிறகும், பக்தர்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்களுக்கு வீடுதேடி வழங்க தபால் துறையுடன் பழனி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

அதில் அரை கிலோ பஞ்சாமிர்தம் ,விபூதி பாக்கெட், முருகனின் ராஜ அலங்கார உருவப்படம் அடங்கிய பார்சல் வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முருகனின் பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் அதற்கான படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து  250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

 

பிரசாதப் பொருட்கள் அடங்கிய பார்சல் விரைவு தபால் மூலம் வீட்டுக்கு வந்துவிடும் என தபால் நிலையப் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், ஆதார் அட்டையானது அனைத்துச் சேவைகளுக்கும் தற்போது தேவைப்படுவதால் பலர் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் நேரம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

 

பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து ஆதார் சேவைக்காகப் பிரத்தியேக சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்தச் சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஈரோட்டைப் போலவே அனைத்து மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் பழனி பஞ்சாமிர்த தபால் சேவை உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 'Politics in Panjamirtham'-Temple administration responds to allegation

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட  கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

காதலர் தினம்: மனைவி மஞ்சிமா மோகனுடன் கௌதம் கார்த்திக் சாமி தரிசனம்

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Gautham Karthik and his wife Manjima Mohan visited palani murugan temple

 

நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் காதலர் தினமான இன்று இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். 

 

சாமி தரிசனம் செய்ய மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக இருவரும் மலை மீது சென்றனர். இவர்களைப் பார்த்த பக்தர்கள் பலர் புகைப்படம் எடுக்கத் திரண்டனர். அதனால் விரைவாக சாமி தரிசனம் செய்து பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றனர். 

 

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து திரை பிரபலங்கள் வருகை தர துவங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று சமந்தா, இயக்குநர் பிரேம் குமார் உள்ளிட்டோர் தரிசனம் மேற்கொண்டதை அடுத்து தற்போது திருமண தம்பதியான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் வழிபாடு செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.