Published on 26/10/2021 | Edited on 26/10/2021

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா என்ற பகுதியிலிருந்து டர்க்கி நாடு வழியாக தனி ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று நேற்று (25.10.2021) திருச்சி விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் பாதிப்படைந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்குத் தனி ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அழைத்து வந்தனர்.
இந்த விமானத்தில், விபத்தில் சிக்கிய நபர் மற்றும் அவருடன் வந்த உதவியாளர்கள் இருவர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சிகிச்சைக்காக திருச்சி வந்து சேர்ந்துள்ளனர். விமான நிலையம் வந்து சேர்ந்த அவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சாலை வழியாக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.