காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இல்லத்தில் தங்கியிருந்த ராமதாஸ் என்பவர் உள்பட 294 பேரை வருவாய் துறை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரிவிக்கவில்லை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி கருணை இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது "அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டவர் மரணமடைந்து விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்".