பாலியியல் தொந்தரவில் பட்டதாாி பெண் பிபிஷா மரணம் அடைந்ததால் அண்ணனை கைது செய்ய வலியுறுத்தி உறவினா் மற்றும் மாதா் சங்கத்தினா் கலெக்டாிடம் மனு கொடுத்தனர்.
குமாி மாவட்டம் கிள்ளியூா் அருகே வாழபழஞ்சி விளையை சோ்ந்தவா் ரசல்ராஜ். இவரது மகள் பிபிஷா (22) எம்.ஏ பட்டதாாியான இவர் வீட்டில் தனியாக டி.வி. பாா்த்து கொண்டிருக்கும் போது திடீரென்று டி.வி யில் படம் தொியாமல் நின்றதாம்.
உடனே பிபிஷா பக்கத்தில் இருக்கும் அண்ணன் உறவு முறை கொண்ட டி.வி. மெக்கானிக்கல் ராஜேஷ்(32) -ஐ டி.வி.யை சாி செய்ய சொல்லியிருக்காா். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ராஜேஷ் அந்த வீட்டிற்கு சென்று டி.வி யை சாி செய்து கொண்டிருக்கும் போது அதை அருகில் நின்று பாா்த்து கொண்டிருந்த பிபிஷா மீது ராஜேஷ்க்கு சல்லாபம் ஏற்பட்டதால் அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் அதிா்ச்சியடைந்த பிபிசா சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்துள்ளாா். இதனையடுத்து ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா்.
இந்த நிலையில் மனமுடைந்த பிபிஷா உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். இது சம்மந்தமாக புதுக்கடை போலிசாா் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனா்.
இந்த நிலையில் பிபிஷாவின் பெற்றோா்களும் மாதா் சங்கத்தினரும் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து போலிசாா் ராஜேஷ்க்கு உடந்தையாக செயல்பட்டு அவரை கைது செய்வதில் மெத்தனம் காட்டிவருவதாக குற்றம்சாட்டியதோடு உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.