Published on 10/11/2023 | Edited on 10/11/2023

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், நீலகிரியில் மழைப் பொழிவு காரணமாக கள்ளாரில் இருந்து ரன்னிமேடு பகுதிக்கு இடையேயான தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் கடந்த நான்காம் தேதி முதல் மலை ரயில் நிறுத்தப்பட்டது.

பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த எட்டாம் தேதி மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி மீண்டும் மலை ரயில் வரும் 13 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.