Skip to main content

'ஆன்லைனில் ஒரு மணிநேரம் தேர்வு'- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

ONLINE FINAL SEMESTER EXAM ANNA UNIVERSITY

 

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு ஒருமணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மாதிரி ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 19, 20- ஆம் தேதிகளிலும், விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர்- 21 ஆம் தேதியும் நடைபெறும். மாணவர்கள் லேப்டாப், வெப் கேமரா வசதியுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

 

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு ஒரு மணிநேரம் ஆன்லைனில் நடைபெறும். ஒரு நாளைக்கு நான்கு சுற்றுகளாகத் தேர்வு நடைபெறும்; பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்படும் பாடத்திட்டங்களை மட்டும் படித்தால் போதும். கேட்கப்படும் 40 கேள்விகளில் 30 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்; மாணவர்கள் ஏதேனும் 4 பாடங்களைப் படித்தால் போதும். காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை, பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெறும்' எனத் தெரிவித்துள்ளது.

 

பொறியியல் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு செப்டம்பர்- 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.