Published on 23/03/2025 | Edited on 23/03/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாரியப்பன் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முயல் வேட்டைக்கு சென்ற பொழுது தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி முருகன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.