
வட சென்னை படத்தில் வந்திருப்பதை போலவே முரண்பட்ட காட்சிகள் வடசென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நல்லவர், களங்கமில்லாதவர் எனவும் மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் மங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்ய போவதாக சொல்லி இருப்பது தொடர்பான கேள்விக்கு, யார் எங்கு சென்றாலும் தீர்ப்பு ஒன்றாகவே இருக்கும் எனவும், அரசியல் சாசன அடிப்படையில் சபாநாயகர் முடிவெடுத்துள்ளார் எனவும் முறைகேடுகள் வரக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்திலும் இதே தீர்ப்புதான் அவர்களுக்கு வரும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும்,தேர்தலை எதிர் கொள்ள அதிமுக தயாராகவே இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
உள்ளாட்ச்சி தேர்தலை நடத்த அதிமுக தயாராகவே இருக்கின்றது என தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது திமுக எனவும், வழக்கு நீதித்துறையில் இருப்பதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தாமதமாகின்றது எனவும் தெரிவித்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், தொண்டர்களாக வருந்தி வந்தால் அவர்களை இணைப்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் முரண்பட்ட காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது எனவும் அது போலவே வடசென்னையில் முரண்பாடான செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்த தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் நல்லவர், களங்கமில்லாதவர் எனவும் தெரிவித்தார்.
சபாநாயகர் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது எனவும், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் சபாநாயகருக்கு இதில் தலையிட உரிமையில்லை எனவும் தெரிவித்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ வையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதா இல்லையா என்பதை தலைமை முடிவு செய்யும் என தெரிவித்த அவர், தினகரன் சொன்ன ஸ்லிப்பர் செல்கள் எங்கிருக்கின்றது என்றே தெரியவில்லை எனவும் அவற்றை தேடிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முல்லை பெரியார் அணை முன்பாக புதிய அணை அமைக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். நல்ல ஆட்சியை கவிழ்ப்பது சரியல்ல எனவும் அப்படி செய்தால் அம்மாவின் ஆன்மா சும்மா இருக்காது எனவும், தவறு செய்தால் அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனவும் தெரிவித்தார். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.