"தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'நிவர்' புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு அருகே 450 கி.மீ. தொலைவில் 'நிவர்' புயல் மையம் கொண்டுள்ளது" இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'நிவர்' புயல் காரணமாக சென்னையின் தியாகராய நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, திருவான்மியூர், அடையார், கிண்டி, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.
அதேபோல், வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரி சென்றுள்ளனர்.
கனமழை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே நாளை (25/11/2020) மாலை தீவிர புயலாக 'நிவர்' கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.