சென்னையில் சரவணா ஸ்டோர் உள்ளிட்ட கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தியாகராய நகர், பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சரவணா ஸ்டோர், வசந்த் அன்கோ, ஹாட்சிப்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் ஜிஎஸ்டி செலுத்தத் தவறியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ரூ.40 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, புகார் எழுந்த மேற்கொண்ட நிறுவனங்களின் கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.