கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் பேராசிரியர் நிர்மலா தேவி. இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.
கார் ஒன்றில் தனியாக வந்த அவர், வழக்கு விசாரணையில் ஆஜரானார். இந்த வழக்கு வரும் 19.08.2019 அன்று ஒத்திவைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் அவர் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் காரில் புறப்பட்டார்.
இன்று கோர்ட்டுக்கு வந்திருந்த அவர், மொட்டை அடித்திருந்தார். சிறையில் இருக்கும்போதே, சிறையில் இருந்து வெளியே வந்தால் மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டியிருந்ததாகவும், அதன்படி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மொட்டை அடித்ததாகவும், இன்னும் அவர் திருப்பதி போன்ற கோவில்களுக்கு சென்று மொட்டை அடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.