Skip to main content

'வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது'- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

new cyclone forming is possible chennai meteorological department


வங்கக்கடலில் வரும் 8- ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்குச் செல்ல வேண்டாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 


இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தோவாளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.


 

சார்ந்த செய்திகள்