திண்டுக்கல் பழனியில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன பஸ்கள் சேவையை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல் திருச்சி மார்க்கம் மற்றும் பழனி திருச்சி மார்க்கம் என இரண்டு குளிர்சாதன வசதிகொண்ட பஸ் போக்குவரத்து சேவை திண்டுக்கல்லில் துவக்கி வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வைத்தார்.
அதன் பின் அமைச்சர் சீனிவாசன் பேசும் போது "தனியாரை காட்டிலும் மேம்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு பஸ் சேவை தமிழகத்தில் தான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார். ஏற்கனவே திண்டுக்கல் திருச்சி சாதாரண பஸ் கட்டணம் 90 முதல் 100 வரை உள்ளது தற்பொழுது 115 என நியமிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பழனியில் இருந்து திருச்சி பஸ் கட்டணம் 145 ரூபாயாக உள்ளது. இந்த ஏசிபஸ்க்கு 175 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி பஸ்ஸில் தானியங்கி கதவு, இருக்கையிலும் அலைபேசி சார்ஜர் வசதி, இருக்குயின் மேல் பகுதியில் ஏசி மற்றும் லைட் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் நடத்துனர் தவிர்த்து இந்த ஏசி பஸ்ஸில் 54 பேர் பயணம் செய்யலாம்.