Published on 05/09/2020 | Edited on 05/09/2020

தி.மு.க தலைவர் ஸ்டாலின் 'மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம்' என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
கரோனாவால் சென்னையில் நிகழ்ந்த மரணங்களுக்கு இன்னும் விளக்கம் வரவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சியை தந்துள்ளது நெல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால், நெல்லை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களில் 103 பேரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. கரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்களைத் மறைத்து மகுடம் சூட்டிக் கொள்ள நினைக்கிறது தமிழக அரசு. மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம். உண்மையை மொத்தமாக வெளியிடுங்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.