நெல்லை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கலைஞரால் மாவட்ட பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். கட்சியில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கலைஞரால் கருப்பசாமி பாண்டியன் நீக்கப்பட்டார். அதன்பின் கடந்த இரண்டு வருடமாக கருப்பசாமி பாண்டியன் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
கட்சி தொடர்பில்லாமல் ஒதுங்கியிருந்த அவர் அதிமுகவில் சேருவதற்காக பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வந்த நிலையில் அதேசமயம் சசிகலா இருந்தபோது சசிகலா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின் ஏற்பட்ட பிணக்கு காரணமாக மறுபடியும் அரசியலை விட்டு ஒதுங்கியபடியே இருந்த கருப்பசாமி பாண்டியன் திமுக தலைவர்களை தொடர்பு கொண்டு திமுகவின் சேரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
அந்த சமயத்தில் கலைஞர் மருத்துவமனையில் இருந்த நிலையில், கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்தன. ஆனால் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருந்ததால் இந்த இணைப்பு தள்ளிவைக்கப்பட்டது. கலைஞர் மறைந்த பிறகு கருப்பசாமி பாண்டியனை திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
அவருக்கு சில பொறுப்புகள் வழங்கபடாமல் இருந்த நிலையில், அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் நாங்குநேரி இடைத்தேர்தலில் சில பொறுப்புகள் தரப்பட்டன. அந்த பணிகளையும் சிறப்பாக திறம்பட செய்திருந்தார் கருப்பசாமிபாண்டியன்.
இதனிடையே தனக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என ஆதங்கத்தில் இருந்த கருப்பசாமி பாண்டியன் பலமுறை கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாமல் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் என்னை பயன்படுத்திக்கொண்டு கொண்டதாக விரக்தியில் இருந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு அதிமுகவினர் குறிப்பாக நெல்லையைச் சேர்ந்த சுதா பரமசிவம், அம்பை எம்எல்ஏவான முருகையா பாண்டியன் ஆகியோர் அவரை சந்தித்து அதிமுகவில் சேரும்படி அழைப்பு விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக்கும் தகவல் தெரிவித்த நிலையில் கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணையப் போவதாக நெல்லையில் தகவல் கசிந்தது. இந்நிலையில் இன்று மாலை சென்னை சென்ற கருப்பசாமி பாண்டியன் கட்சியின் பொறுப்பாளரான ஓபிஎஸ்ஸின் தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.