சமூக ஆர்வலரும், பொது விவகாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுபவருமான சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி இன்று நெல்லை வந்திருந்தார். நெல்லை டவுண் நேதாஜி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கடைக்காரர்கள் கடைகளைக் காலி செய்யும் கெடு இன்றுடன் (16/09/2019) முடிவடைகிறது. தங்களின் நிலையை அவரிடம் தெரிவித்ததையடுத்து நெல்லை வந்த டிராபிக் ராமசாமியை மார்க்கெட் சங்கத் தலைவரும், தி.மு.க.வின் முன்னாள் நெல்லை எம்.எல்.ஏ.வுமான மாலைராஜா வரவேற்றார்.
டிராபிக் ராமசாமியிடம் மார்க்கெட் கடைக்காரர்கள் வைத்த கோரிக்கையான, மார்க்கெட் கடைகளைக் காலி செய்யும் கால அவகாசம் தைப் பொங்கல் வரை நீட்டிக்கப்பட்ட வேண்டும். அதன் பின் கடைகள் கட்டி முடிக்கப்படும் வரை அவர்களுக்கு மாற்றுக் கடைகளுக்கான ஏற்பாடுகளைச் அரசு செய்ய வேண்டும். கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பின்பு கடைக்காரர்களுக்கு கடைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை சென்னையில் இருந்த நெல்லை மாநகராட்சி ஆணையாளரிடம் தொலைபேசியில் தெரிவித்த டிராபிக் ராமசாமி, தவறினால் நீதிமன்றம் செல்வேன் என்றிருக்கிறார். அப்போது கடைக்காரகள் மற்றும் மாலைராஜா உடனிருந்தார்கள். டிராபிக் ராமசாமியின் தலையீட்டால் நேதாஜி மார்க்கெட் விவகாரம், பரபரப்பாகியிருக்கிறது.