Skip to main content

தோல்வியில் முடிந்த சமாதான பேச்சு...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 493 விவசாயிகளின் நகைகள் 1790 பவுண் கொள்ளையில் சென்னை நுகர்வேர் நீதிமன்றம் 28 விவசாயிகளுக்கு மட்டும் வழங்க உத்தரவு மீதி நகைகளை பறிகொடுத்த 465 விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில் காத்திருக்கும் போராட்டம் தொடர்பாக  தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
 

protest against bank


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. 

இந்த வங்கியில் சுமார் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25-2-2010-ம் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 493 விவசாயிகள் சுமார் 1790 பவுண் நகைகளை திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து வங்கியின் நகைகள் கொள்ளை போனது.

இந்த திருட்டு கொள்ளை சம்பவம் நடந்து சுமார் 9 ஆண்டுகள் முடிந்து 10-வது ஆண்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலமாக இதுவரை திருடுபோன நகைகளை இதுவரை மீட்டு விவசாயிகளுக்கு தரவில்லை. ஆனால் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் 28 விவசாயிகளுக்கு மட்டும் கூட்டுறவு வங்கியின் மூலமாக நகைகளை திருப்பி தர உத்தரவிட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த 469 விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக 6-11-2019ம் தேதி திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கியிருந்தனர். 

இதனை அறிந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது. இந்த சமாதான கூட்டத்திற்கு உளுந்தூர்பேட்டை உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார், திருக்கோவிலூர் சரக துணை பதிவாளர் தயாளன், திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சங்க தலைவர் மார்நோடை சம்பத் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் ராணி, சந்திரசேகர், மணிவண்ணன், கருணாநிதி, செந்தில், கருப்பன், குப்புசாமி, மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, த.தி.மு.மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, DYFI  ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு சங்க பொறுப்பாளர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


இந்த சமாதானம் கூட்டம் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் முன்னேற்றமோ பயனளிக்கவில்லை. அதனால் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சமாதான கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே வந்துவிட்டார்கள்.இதனால் சமாதான கூட்டம் தோல்வியில் முடிந்தது.

நகைகளை பறிகொடுத்த ராணி என்பவர் "நாளை 06-11-2019-ம் தேதி காத்திருப்பு போராட்டம் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்றும் நகைகளை பறிகொடுத்த விவசாயிகளும் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கமும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார், டிஎஸ்பி மற்றும் டிஆர் முன்பு தெரிவித்து சமாதானம் கூட்டத்தில் இருந்து அவரவர்கள்  சென்றதாக" கூறினார் 
 

 

சார்ந்த செய்திகள்