நெல்லை மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு சரியான அளவில் சுடிதார் தராத துணிக்கடைக்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி மகாலட்சுமி, கடந்த 2017- ஆம் ஆண்டு தீபாவளியின் போது அபிராமி ரெடிமேட்ஸ் கடையில் அனார்கலி சுடிதார் வாங்கினார். பேண்ட் சரியான அளவில் இல்லாமல் இருந்ததால், சிறுமி மகாலட்சுமி தீபாவளி தினத்தன்று புதிய ஆடை (சுடிதார்) அணிய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியின் தாயார் ரெடிமேட்ஸ் கடையின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாடிக்கையாளரான சிறுமிக்கு ரூபாய் 20,000 இழப்பீடு வழங்கவும், அத்துடன் சுடிதாரின் விலையான ஆயிரம் ரூபாயையும் திருப்பிக் கொடுக்க ரெடிமேட்ஸ் கடை நிர்வாகத்துக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நுகர்வோருக்கு சரியான அளவில் சுடிதார் கொடுக்காதது முறையற்ற வணிகமாகும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.