Skip to main content

அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றம்... கல்வெட்டு தகர்ப்பு... எம்.எல்.ஏ. தரப்பு அத்துமீறலால் பரபரப்பு!

Published on 15/11/2020 | Edited on 16/11/2020
Nellai admk incident

 

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி அருகிலுள்ள மூலக்கரைப்பட்டியை  ஒட்டியுள்ள புது குறிச்சிக் கிராமத்தில் “ஜெ“வின் 63வது பிறந்த நாள் ஞாபகார்த்தமாக அ.தி.மு.க கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட பீடத்தில் கல்வெட்டும் பதிக்கப்பட்டது. அப்போதைய நெல்லை புறநகர் அ.தி.மு.க.வின் மா.செ.வான முருகையாபாண்டியன் தலைமையில் கொடி ஏற்றப்பட்ட நிகழ்ச்சியில், ஒ.செ. விஜயகுமாரும் கலந்து கொண்டார்.

 

அந்தக் கல்வெட்டில் மா.செ.முருகையாபாண்டியன், மற்றும் ஒ.செ.விஜயகுமார் இருவரது பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாங்குநேரித் தொகுதி எம்.எல்.ஏ.ரெட்டியார்பட்டி நாராயணனின் தரப்பினர் கடந்த 13 தேதி நள்ளிரவு அதிரடியாக பீடத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டை இடித்து அப்புறப்படுத்திவிட்டு எம்.எல்.ஏ.வின் பெயரைக் கொண்ட கல்வெட்டைப் பதிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் கொடிக்கம்பமும் அகற்றப்பட்டிருக்கிறது. பொழுது விடிந்த மறுநாள் காலை, பீடம் இடிக்கப்பட்டு கல்வெட்டு அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு பரபரப்பான அ.தி.மு.க.வின் புதுக்குறிச்சி கி.க.செ.வான சுப்பிரமணியன் ஒ.செ.விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார்.

 

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ஒ.செ.விஜயகுமார் அதுகுறித்து மா.செ. தச்சை கணேசராஜாவிடம் புகார் தெரிவிக்க, அது தொடர்பாக எம்.எல்.ஏ.விடம் பேசிய மா.செ. பழைய நிலையில் கல் கல்வெட்டு அமைக்கப்பட வேண்டும் என்றிருக்கிறாராம். இதுகுறித்து ஒ.செ. விஜயகுமார் கூறியது, “அம்மாவின் 63ம் பிறந்த நாள் கொடியேற்ற கல்வெட்டை அகற்றிவிட்டு தனது பெயரிலான கல்வெட்டு, மற்றும் கொடிக்கம்பம் அமைக்க எம்.எல்.ஏ. முயற்சி செய்திருக்கிறார். உடனே மா.செ. தலையிட்டு முந்தைய நிலையில், அது எப்படி இருந்ததோ அதுபடியே இருக்க வேண்டும்” என்று எம்.எல்.ஏ.விடம் தெரிவித்திருக்கிறார் என்றார்.

அ.தி.மு.க.வினராலேயே அ.தி.மு.க.வின் கல்வெட்டு பீடம், தகர்க்கப்பட்டு கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவம், நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க.வில் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக ஓட்டு யாருக்கு? - போட்டியில் நாம் தமிழர், பாமக 

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
AIADMK vote for whom?- In the contest between pmk, naam tamilar

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.

திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'முன் காலங்களில் அதிமுகவிற்காகவும், தேமுதிகவிற்கும் ஆதரவு தெரிவித்து பணியாற்றியதால் அந்த உரிமையோடு கேட்கிறேன் அதிமுகவினர், தேமுதிகவினர் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்' என மேடையில் பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் தமிழர் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து இருந்தனர்.

AIADMK vote for whom?- In the contest between pmk, naam tamilar

இதனால் அதிமுக மற்றும் தேமுதிக வாக்குகளைப் பெற நாம் தமிழர் தீவிரம் காட்டுவதாக கருத்துக்கள் எழுந்தது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'தாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவெடுத்ததுள்ளதால் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது' எனத் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

 

AIADMK vote for whom?- In the contest between pmk, naam tamilar

அதேநேரம் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவின் ஆதரவை நேரடியாக கோரியுள்ளார். முன்னதாக அவருடைய பிரச்சார மேடையில் இடம் பெற்றிருந்த பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அடையாளமாக மோடியுடன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'நாங்கள் தேர்தலை புறக்கணித்து விட்டோம் என்பது எங்களுடைய கட்சி தொண்டர்களுக்கும் தெரியும். ஆனால் அதிமுக கூட்டணி இல்லாத பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம் வைப்பது என்பது செய்யக்கூடாத ஒன்று. ஆனால் இன்று அதைச் செய்கிறார்கள் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல் நோக்கமாகத்தான் இருக்கும். அப்படித்தான் அதைக் கருத வேண்டும். அதேநேரம் படத்தை போடாதீர்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை' - மீண்டும் முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Father's health is not good'-MR Vijayabaskar seeks anticipatory bail again

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முன்ஜாமீன் மனுவை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஒருமுறை முன்ஜாமீன் மனு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.