முன்னாள் அமைச்சர் மறைந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு ஜூலை 11 சனிக்கிழமை நூற்றாண்டு விழா தொடங்கியது. அவரது நினைவு நாளான 11ந் தேதி தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் நாவலரின் புகழை போற்றும் வகையில் அவரது படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஈரோட்டில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நாவலரின் படத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமையில் தி.மு.க.வினர் மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள். இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட அவை தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் பவானியில் மா.செ. நல்லசிவம் தலைமையில் நாவலர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.