Skip to main content

மருத்துவக்கல்லூரி விவகாரத்தில் குதுகலமாகும் நாகப்பட்டினம்; கருப்புக்கொடி காட்ட தயாராகும் மயிலாடுதுறை!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

நாகையில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிக்கு வரும் ஏழாம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். அதனால் நாகப்பட்டினம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள சில பகுதிகள் குதுகலமாகியிருக்கிறது, அதே நேரத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மயிலாடுதுறை கோட்டத்தின் மக்களோ மருத்துவக் கல்லூரி விவகாரத்திலும் தங்களை புறக்கணித்து விட்டதாக வேதனையின் உச்சத்திற்கு சென்றவர், முதலமைச்சர் வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

 Nagapattinam is the pinnacle of medical college affairs; Mayiladuthurai ready to show black flag!


நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வேளாங்கண்ணி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் அமைய உள்ளது. 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரிக்கு 7 ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டிவைக்கிறார்.

முதலமைச்சரின் வருகைக்காக பிரமாண்ட ஷெட் அமைப்பது, புதிய சாலைகள் அமைப்பது, தெருவிளக்குகள் பொருத்துவது என தீவிர வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் உள்ளிட்ட அதிமுகவினர் .

இந்த நிலையில் நாகை மாவட்டத்தின் மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில், உள்ளிட்ட பகுதி மக்களோ தங்களை ஆளும் அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், முதல்வர் பழனிச்சாமி வரும்போது வீடுகளில்,தெருக்களில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

 

 Nagapattinam is the pinnacle of medical college affairs; Mayiladuthurai ready to show black flag!

 

இது குறித்து மயிலாடுதுறை போராட்டக்குழு தலைவர்களுல் ஒருவரான வழக்கறிஞர் சேயோன் கூறுகையில்," மயிலாடுதுறைக்கு மாவட்டம், மருத்துவக் கல்லூரி, புறவழிச்சாலை, தொழிற்சாலைகள் என பல கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த போதிலும் ,

தமிழக அரசு தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டத்தை  வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறது. இதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாகப்பட்டினத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நாளான மார்ச் 7 ம் தேதியன்று, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் பொதுமக்கள் கருப்புக் கொடியை ஏற்றி தங்களுடைய எதிர்ப்பை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.