Published on 24/03/2025 | Edited on 24/03/2025

சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரையில் திங்கட்கிழமை காலை விண்கலம் போன்ற மிதவை மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது.இதனைப் பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியமடைந்து உடனடியாக மீன்வளத்துறை, கடலோர காவல் படையினர், வருவாய்த்துறை உள்ளிட்டவர்களுக்குத் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் மிதவை பொருளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த மிதவை பொருள் நடுகடல்களில் சர்வதேச கடல் எல்லை கோடுகளை அடையாளம் காட்டுவதற்காக மிதக்கப்படும் பொருள் போல் உள்ளது என்றும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
மிதவை மர்ம பொருள் மிதந்து வந்த தகவல் கிடைத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து இதனைப் பார்த்துச் செல்கின்றனர்.