அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கைபரப்பு செயலாளராகவும்,டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த தங்கதமிழ்செல்வனும், டிடிவிக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் தங்கதமிழ்செல்வனை கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து டிடிவி நீங்கினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

thangatamilselvan at dmk

அதனையடுத்து அதிமுகவில் சேர்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் தங்கத்தமிழ்ச்செல்வனோ தான் எந்த கட்சியிலும் சேரவில்லை என ஊடகங்களில் தெரிவித்துவந்தார். இந்நிலையில் அவர் அதிமுகவில் சேர முயன்றால் சேர்த்துக்கொள்ளக்கூடாது எனதேனி மாவட்டஅதிமுக செயலாளர் சையது கான் தலைமையில்தேனி அதிமுக நிர்வாகிகள்ரகசிய தீர்மானம் போட்டு அதை ஒபிஎஸ்சிடமும், எடப்பாடியிடமும் கொண்டு செல்ல ஆயத்தமாகினர்.

Advertisment

இந்நிலையில் தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.அவர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.