
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்த இம்ரான்(26 ). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின்பு கஞ்சா விற்பனை செய்வதில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு இம்ரான் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் இம்ரானை கத்தியால் குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த இம்ரானை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் அங்கு இம்ரானுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இம்ரான் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.