





Published on 10/11/2021 | Edited on 10/11/2021
இன்று (10.11.2021) சென்னை தி.நகர் தபால் நிலையம் அருகில் ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் 10,000 பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் அதிகமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, உணவு வங்கி மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. துவங்கிவைத்தார்.