Published on 04/09/2020 | Edited on 04/09/2020

தமிழகத்தில் செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே செப்டம்பர் 10- ஆம் தேதி முதல் வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 8- ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை- மேட்டுப்பாளையம் இடையே செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி- நாகர்கோவில் இடையே செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஏற்கனவே அறிவித்த 9 சிறப்பு ரயில்களுடன் சேர்த்து மொத்தம் 13 ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு நாளை (05/09/2020) காலை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.