தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பொழிந்து வரும் நிலையில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோனை மேற்கொண்டு வருகிறார்.
காணொளி காட்சி மூலம் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், வருவாய்த்துறை, வேளாண்துறை, மருத்துவம், மின்சாரம், மீன்வளம், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிய உள்ளார். பருவமழை பாதிப்புகள் ஏற்படாத வகையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் நேரில் பங்கேற்றுள்ளனர்.