Skip to main content

குரங்கு அம்மை பரவல்... தமிழக அரசு அவசர அறிவிப்பு!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

Monkey pox spread ... Tamil Nadu government announces emergency!

 

கரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது.

 

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் வெளிநாட்டில் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனே தகவல் தரவேண்டும். குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் தனிமைப் படுத்தப்பட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறி என சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்