Skip to main content

குரங்கனி வனப்பகுதிக்குள் நுழைந்தது வெளிநாட்டு  தீவிரவாதிகளா?

Published on 18/11/2018 | Edited on 18/11/2018
k

 

போடி தொகுதியில் உள்ள குரங்கனி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற 23பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.


.   இந்நிலையில் இன்று காலையில் அனுமதியின்றி  வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 6 பேர் குரங்கணி மலைப்பகுதியில் புகுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  

   கேரளா மூணாறு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த  மூன்று ஆண்கள் மூன்று பெண்கள்  உள்பட ஆறு பேர் கடந்த ஒருவாரமாக கேரள பகுதிகளில் சுற்றுலா சென்றுவிட்டு, டாப்ஸ்டேஷன் வழியாக, சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தடைந்து குரங்கணி வந்துள்ளனர். இத்தகவல் அப்பகுதியில் உள்ள  வனத்துறையின் காதுக்கு எட்டவே  உடனே விரைந்து சென்ற போடி வனச்சரக வனத்துறையினர் அந்த  வழிகாட்டி உட்பட ஆறு பேரை பிடித்து, வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துவந்து   குரங்கணி காட்டுத்தீ சம்பவத்திற்கு பிறகு குரங்கணி வனப்பகுதியில் டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இவ்வழியாக ஏன் வந்தீர்கள்? என அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சரிவர பதிலளிக்காததால், அவர்களுடைய பாஸ்போர்ட்டை காட்டும்படி வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அந்த ஆறு  வெளிநாட்டினரும் பாஸ்போர்ட்டை  காட்டாமலேயே  அந்த  வெளிநாட்டை சேர்ந்த ஆறு பேரும்  வனச்சரக அலுவலகத்தில் இருந்து தப்பித்ததாக தெரிகிறது.

  

nm


அப்படி  தப்பிக்கும் போது அங்கு இருந்த  வனத்துறையினரையும் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.    ஆனால் விசாரணைக்கு வனத்துறையினர் அழைத்து  வந்த போது திடீரென வனத்துறையினரை தாக்கி விட்டு தலைமறைவாகி இருக்கிறார்கள் என்றால் அந்த ஆறு வெளிநாட்டவரும் தீவிரவாதிகளா? எதற்காக இங்கு  அவர்கள் வந்துதப்பித்து போய் இருக்கிறார்கள் என்று  தெரியாமல் வனத்துயினர் டென்ஷனாகி விட்டனர்.


 உடனே இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு  போடி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.   அதன் அடிப்படையில் காக்கிகளும் அந்த  ஆறு பேரை தேடும் பணியில் களம் இறங்க இருக்கிறார்கள் .  இப்படி குரங்கனி வனப்பகுதிக்குள்  அனுமதி இல்லாமல்  புகுந்த அந்த  ஆறு  வெளிநாட்டவர்களால்  மாவட்டத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்