Published on 29/10/2021 | Edited on 29/10/2021

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று (28.10.2021) கலையரங்கத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவெறும்பூர் சர்வீஸ் ரோடு, ஏர்போர்ட் ரன்வேக்கு அருகில் செல்லும் புதுக்கோட்டை சாலையின் உயரத்தை 3 அடி குறைப்பது, கிராமங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவது, தமிழ்நாடு அரசின் திட்டங்களை மாநகராட்சி குப்பை வண்டிகளில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்குத் தொியப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.