இந்தியா முழுவதும் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் பரபரப்பாக முழ்கி கிடக்கிறது இந்தியா. அதே வேளையில் அரசியல்வாதிகள் கட்சிகாரர்களை கடைசி வரை உற்சாக படுத்துவதற்கு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வருகிறார்கள். இதற்கு இடையில் கடந்த இரண்டு தினங்களாக பொதுமக்களே அக்கம்பக்கத்து வீடுகளில் பணம் எப்போ கொடுப்பாங்க, எவ்வளவு தராங்க, எப்படி லிஸ்ட் எடுக்கிறாங்க, என தொடர் சந்தேக குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அதே நேரத்தில் தமிழக அரசியல்வாதிகளில் டிடிவி தினகரன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கதமிழ் செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோர் மக்களிடம் இன்னும் டென்ஷனை அதிகரிக்கும் விதமாக ஓட்டுக்கு 10,000 ரூபாய் குடுப்பாங்க, 20,000 ரூபாய் குடுப்பாங்க என்று சொல்லி மக்களிடம் இன்னும் பண ஆசையை அதிகரித்து விட்டார்கள். இதனால் மக்களிடம் பணம் எப்போ வரும். வந்தவுடன் இந்த வேலை எல்லாம் செய்து விடலாம் என அந்த பணத்திற்கும் செலவு பட்டியல் பிளான் பண்ணி பணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிவபதி சார்பில் ஓட்டுக்கு 550 ரூபாய் இன்று காலை 4.00 மணி முதல் 5.30 வரை மாநகர் முழுவதும் சப்ளே செய்துவிட்டனர். அதே நேரத்தில் புறநகர் பகுதியான மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ஓட்டுக்கு 300 ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். இதனால் மக்கள் கடுப்பாகி என்னாச்சு இவ்வளவு கம்மியா கொடுத்திருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இது முதல் ரவுண்டுதான். அடுத்த ரவுண்டு கண்டிப்பா உண்டு. என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில் திருச்சியில் கிழக்கு தொகுதிக்கு உட்பகுதியான மகாராணி தியேட்டர் அருகே உள்ள பகுதியில் குடிசை பகுதி மற்றும் தலித் மக்கள் உள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்காக ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்திக்கிறார்கள். அதேசமயம் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.
அமமுக வேட்பாளர் சாருபால சார்பில் மலைக்கோட்டை பகுதியில் ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று பல்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்தவர்கள்.