
ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் விழா மேடைக்கு வந்தடைந்தார் மோடி.
இன்று திருப்பூரில் நடக்கவிருக்கும் அரசு மற்றும் கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தற்போது கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வந்துள்ளார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்,மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி, எம்பி மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் அவரை வரவேற்க தற்போது விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் எண்ணூர் துறைமுகத்தில் புதிய பைப்லைன் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை டி எம் எஸ் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொளியில் இருந்து தொடங்கி வைத்தார் மோடி.