Skip to main content

சாதனை படைத்த சிறுமியை வீடு தேடிச் சென்று வாழ்த்திய எம்.எல்.ஏ!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
The MLA who went in search of the house of the record girl

 

சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்த சிறுமி சுகித்தாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வாழ்த்தினார். தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று வருபவர் திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன் -பிரகதா தம்பதியரின் மகள் சுகித்தா (12).

 

கோவா சர்வதேச போட்டியில் முதல் பரிசாகத் தங்கம் வென்றதில் தொடங்கி, சிங்கப்பூர் சர்வதேச போட்டியில் தங்கம், மற்றும் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன், டெல்லியில் நடந்த தேசிய போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளியென 25க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்துள்ளார். 12 வயதிலேயே சிலம்பக்கலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வகை பாடங்களை கற்று, ஆறு வயது சிறுவர் முதல் அனைவருக்கும் இலவசமாகவே சிலம்பம் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி பல்வேறு சாதனை புரிந்த சுகித்தாவின் இல்லத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் நேரடியாகச் சென்று சுகித்தாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். முதல்வர் ஸ்டாலினை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, விரைவில் திருச்சியில் தொடங்கப்படவிருக்கும், ரைபிள் கிளப்பில் கவுரவ உறுப்பினராக இருக்கவும் பரிந்துரை செய்வதாக அவர் உறுதியளித்தார். மேலும், சிலம்ப பயிற்சிக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் களம் அமைத்துத் தரப்படும் என்றும் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உறுதியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்